February 23, 2025
தேசியம்
செய்திகள்

Star Blanket Cree Nation பகுதிக்கு பிரதமர் செல்லாதது குறித்து ஏமாற்றம்

பிரதமர் Justin Trudeau திங்கட்கிழமை (16) Star Blanket Cree Nation பகுதிக்கு செல்லாதது குறித்து ஏமாற்றம் வெளியிடப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை பிரதமர் Justin Trudeau Saskatchewan மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.

ஆனாலும் கடந்த வாரம் இரண்டாயிரத்துக்கும் அதிகமான சாத்தியமான மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட Star Blanket Cree Nation பகுதிக்கு அவர் செல்லவில்லை.

இது குறித்து FSIN என்னும் இறையாண்மை கொண்ட முதற்குடிகளின் கூட்டமைப்பு ஏமாற்றம் வெளியிட்டுள்ளது.

சாத்தியமான மனித எச்சங்கள் கண்டுபிடிப்புக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், நேரில் சென்று மரியாதை செலுத்த பிரதமர் தவறி விட்டார் என FSIN தலைவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

Related posts

இரண்டு தொகுதிகளில் Liberal, இரண்டு தொகுதிகளில் Conservative வெற்றி!

Lankathas Pathmanathan

காட்டுத்தீயை கட்டுப்படுத்த கனடாவுக்கு அமெரிக்கா உதவி

Lankathas Pathmanathan

November மாதம் அதிகரித்தது வேலையற்றோர் விகிதம்

Lankathas Pathmanathan

Leave a Comment