தேசியம்
செய்திகள்

பிணை சீர்திருத்தம் குறித்து கவனம் செலுத்துகிறோம்: பிரதமர் Trudeau

பிணை சீர்திருத்தம் (bail reform) குறித்து கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் Justin Trudeau தெரிவித்தார்.

இந்த விடயம் குறித்து அண்மையில் மாகாண முதல்வர்கள் மத்திய அரசாங்கத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை (13) பிரதமருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் 13 மாகாணங்கள், பிரதேசங்களின் முதல்வர்கள் கையெழுத்திட்டிருந்தனர்.

Ontario முதல்வர் Doug Fordடின் அலுவலகத்தால் இந்த கடிதம் முன்மொழியப்பட்டது.

கடந்த மாதம் Ontario மாகாண காவல்துறை அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கையை முதல்வர் Fordடின் அலுவலகம் முன்னெடுத்திருந்தது.

அந்த அதிகாரியின் கொலையாளிகள் எனக் கூறப்படும் இருவரில் ஒருவருக்கு, ஒரு வழக்கில் முதலில் பிணை மறுக்கப்பட்டது.

ஆனால் அவர் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த விடயத்தில் முதல்வர்கள் முன்வைக்கும் கவலையை புரிந்து கொள்வதாக பிரதமர் திங்கட்கிழமை (16) தெரிவித்தார்.

Related posts

அரசியலில் இருந்து விலக முன்னாள் Liberal அமைச்சர் முடிவு

Lankathas Pathmanathan

COVID காலத்து தேர்தலுக்கு தயார்: கனேடிய தேர்தல் திணைக்களம்

Gaya Raja

400 நெடுஞ்சாலை வாகன விபத்தில் ஒருவர் மரணம்

Lankathas Pathmanathan

Leave a Comment