தேசியம்
செய்திகள்

Saskatchewanனில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான சாத்தியமான மனித எச்சங்கள்?

முன்னாள் Saskatchewan குடியிருப்பு பாடசாலை பகுதியில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான சாத்தியமான மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Star Blanket Cree Nation அதிகாரிகள் வியாழக்கிழமை (12) இந்த அறிவித்தலை வெளியிட்டனர்.

முன்னாள் குடியிருப்பு பாடசாலை தளத்தில் தரையில் ஊடுருவும் radar மூலம் மேற்கொள்ளப்பட்ட தேடலின் முதல் கட்டத்தை முடித்த நிலையில் இந்த அறிவித்தல் வெளியானது.

கண்டுபிடிக்கப்பட்டவை மனித எச்சங்கள் என இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

ஆனாலும் கடந்த October மாதம், 125 வயது பழமையானதாக நம்பப்படும் குழந்தை ஒன்றின் தாடை எலும்புத் துண்டை கண்டுபிடித்ததாக அதிகாரிகள் வியாழன்று அறிவித்தனர்.

இது குறிக்கப்படாத கல்லறையின் ஆதாரம் என Star Blanket Cree Nation தலைவர் Michael Starr கூறினார்.

காவல்துறையினர், Saskatchewan மரண விசாரணை அலுவலகம் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அவர் கூறினார்.

இந்த கண்டுபிடிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது எனவும் Starr தெரிவித்தார்.

இந்த தேடுதல் நடவடிக்கையை மிகவும் உணர்ச்சிகரமான பயணம் என அவர் வர்ணித்தார்.

Related posts

Ontario வரவு செலவுத் திட்டம் March 26

Lankathas Pathmanathan

COVID காரணமாக ஊழியர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் மருத்துவமனைகள்

Lankathas Pathmanathan

சுகாதார ஊழியர்களுக்கு Quebec தடுப்பூசிகளை கட்டாயமாக்கலாம்!

Gaya Raja

Leave a Comment