கனடிய மத்திய வங்கி அடுத்த சில ஆண்டுகளில் 8.8 பில்லியன் டொலர்கள் வரை இழக்கக்கூடும் என எதிர்வு கூறப்படுகிறது.
C.D. Howe நிறுவனம் வெளியிட்ட ஒரு புதிய அறிக்கையில் இந்த தகவல் வெளியானது.
இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் மொத்த இழப்புகள் 3.6 முதல் 8.8 பில்லியன் டொலர்களுக்கு இடையில் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த இழப்புகளின் விளைவாக மத்திய வங்கி தகவல் தொடர்பு சவாலில் சிக்கக்கூடும் என எச்சரிக்கப்படுகிறது.
கடந்த இலையுதிர் காலத்தில், மத்திய வங்கி அதன் 87 ஆண்டுகால வரலாற்றில் முதல் இழப்பை பதிவு செய்தது.
கடந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் 522 மில்லியன் டொலர்களை இழந்ததாக மத்திய வங்கி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.