தெற்கு Quebecகில் குளிர்கால புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் 40 cm வரை பனிப்பொழிவு எதிர்வு கூறப்படுகிறது
Montreal உட்பட மாகாணத்தின் சில பகுதிகளுக்கு புதன்கிழமை (11) பிற்பகல் சுற்றுச்சூழல் கனடா குளிர்கால புயல் எச்சரிக்கையை வெளியிட்டது.
Montreal உட்பட மாகாணத்தின் பல பகுதிகள் வார இறுதிக்குள் உறைபனி மழையுடன் கூடிய கடுமையான பனிப்பொழிவை பெற உள்ளது.
தெற்கு Quebecகில் வியாழக்கிழமை (12) மாலை முதல் நீடித்த பனிப்பொழிவு ஆரம்பமாகும் என எதிர்வு கூறப்படுகிறது.
வெள்ளிக்கிழமை (13) பிற்பகலிற்குள் 40 cm வரை பனிப்பொழிவு எதிர்வு கூறப்படுகிறது.
வேகமாக குவியும் பனி காரணமாக பயணங்கள் கடினமானதாகும் சாத்தியக்கூறு குறித்து சுற்றுச்சூழல் கனடா எச்சரிக்கிறது.