தேசியம்
செய்திகள்

மத்திய அரசின் நிதி உதவி இல்லாமல் சுகாதார சீர்திருத்தங்களைத் தொடர Alberta தயார்

மத்திய அரசின் நிதி உதவி இல்லாமல் சுகாதார சீர்திருத்தங்களைத் தொடர தயாராக உள்ளதாக Alberta முதல்வர் தெரிவித்தார்.

மாகாண சுகாதார பாதுகாப்பு முறையை சீர்திருத்த மத்திய அரசின் பணத்திற்காக காத்திருக்கவில்லை என Alberta முதல்வர் Danielle Smith கூறினார்.

மத்திய அரசு எங்கள் நிதியுதவி பங்குதாரராக இருக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட வேண்டிய சுகாதார சீர்திருத்தங்களை நிறுத்த முடியாது என அவர் கூறினார்.

எந்தவொரு நிபந்தனையுமின்றி மத்திய அரசு நிதியுதவியை வழங்க வேண்டும் என்ற நிலைபாட்டை மாகாண முதல்வர்கள் நீண்டகாலமாக கடைப்பிடித்து வருகின்றனர்.

சில நிபந்தனைகளுடன், கனடா சுகாதார இடமாற்றத்தின் பங்கை அதிகரிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக கடந்த நவம்பரில், சுகாதார அமைச்சர் தெரிவித்திருந்தார்.

பிரதமர் Justin Trudeauவை தங்களை சந்திக்குமாறு முதல்வர்கள் கடந்த ஆண்டு அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கனடாவில்150,000க்கும் அதிகமான COVID தொற்றாளர்கள்!

Lankathas Pathmanathan

முற்றுகை போராட்டத்தின் முதலாவது ஆண்டை குறிக்கும் மற்றுமொரு போராட்டம்?

Lankathas Pathmanathan

உலகளாவிய தடுப்பூசி பகிர்வு திட்டத்திற்கு 10 மில்லியன் தடுப்பூசிகளை வழங்கும் கனடா!

Gaya Raja

Leave a Comment