Manitoba மாகாண சபை உறுப்பினர்கள் 10 பேர் மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளனர்.
கடந்த சில வாரங்களாக, பல மாகாண சபை உறுப்பினர்கள் அடுத்த தேர்தலில் மீண்டும் போட்டியிட போவதில்லை என அறிவித்து வருகின்றனர்.
எதிர்வரும் இலையுதிர் காலத்தில் மாகாண தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில் விரைவில் அமைச்சரவைக்கு மாற்றம் ஒன்று விரைவில் சாத்தியமாகும் என முதல்வர் Heather Stefanson திங்கட்கிழமை (09) அறிவித்தார்.