Quebec மாகாணத்தின் சட்டமூலம் 96ன் கீழ் இரு மொழி நிலையை தொடர்ந்து வைத்திருக்க Montreal நகராட்சிகள் நடவடிக்கை எடுத்துள்ளன.
Quebecகில், இருமொழி நிலையை இழக்கும் அபாயத்தில் உள்ள நகரங்கள் தங்கள் குடிமக்களுக்கு பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தொடர்ந்து சேவைகளை வழங்குவதற்கு தயாராகி வருகின்றன.
Montreal பகுதியில் உள்ள ஆறு நகராட்சிகள் உட்பட மொத்தம் 47 நகராட்சிகளுக்கு கடந்த டிசம்பரில் மாகாண அலுவலகத்தில் இருந்து இதற்கான அனுமதியை பெற்றுள்ளன.
புதிய சட்டத்தின் கீழ், பிரெஞ்சு மொழியை வலுப்படுத்தவும் பாதுகாக்கவும், 50 சதவீதத்திற்கும் குறைவான குடிமக்கள் ஆங்கிலத்தை தங்கள் தாய் மொழியாக கொண்ட பகுதிகளில் அந்த இருமொழி நிலையை இரத்து செய்ய முடியும்.