தேசியம்
செய்திகள்

விடுமுறை காலத்தில் பயணிகள் எதிர்கொண்ட சவால்கள் குறித்து ஆராய இணக்கம்

விடுமுறை காலத்தில் எதிர்கொள்ளப்பட்ட VIA புகையிரதம், விமான போக்குவரத்து சவால்கள் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் திங்கள்ட்கிழமை (09) நடைபெற்றது.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

இன்று நடைபெற்ற இந்த கூட்டத்தில், விடுமுறை காலத்தில் பயணிகள் எதிர்கொண்ட சவால்கள் குறித்து ஆராய இணக்கம் காணப்பட்டது.

January மாதம் 30ஆம் திகதி மீண்டும் நாடாளுமன்ற அமர்வு ஆரம்பிப்பதற்கு முன்னர் இந்த ஆய்வைத் தொடங்க குழு உறுப்பினர்கள் ஏகமனதாக ஒப்புக் கொண்டனர்.

இதன் முதல் கட்ட விசாரணை எதிர்வரும் வியாழக்கிழமை (12) நடைபெறவுள்ளது.

அன்றைய தினம் போக்குவரத்து அமைச்சர் Omar Alghabra விசாரணையை எதிர்கொள்ளவுள்ளார்.

இந்த விசாரணையின் போது Sunwing, Air Canada, WestJet ஆகிய விமான நிறுவனங்களின் பிரதிநிதிகள், Toronto, Montreal, Vancouver விமான நிலையங்களின் அதிகாரிகள், Via Rail, CN Rail பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொள்வார்கள்.

Related posts

Stanley Cup Playoffs தொடருக்கு தகுதி பெற்ற மூன்று கனடிய அணிகள்

Lankathas Pathmanathan

பாலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர்கள் Toronto பல்கலைக்கழக வளாகத்தில் முகாம்

Lankathas Pathmanathan

துப்பாக்கி கட்டுப்பாட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது

Lankathas Pathmanathan

Leave a Comment