புதிய COVID மாறுபாடுகள் குறித்து விமானங்களின் கழிவு நீரில் கனேடிய விஞ்ஞானிகள் சோதனைகளை மேற்கொள்கின்றனர்.
சாத்தியமான புதிய மாறுபாடுகள் குறித்த முன்னறிவிப்பை பெறும் முயற்சியாக விஞ்ஞானிகள் விமானத்தின் கழிவுநீர் சோதனையை முன்னெடுக்கின்றனர்.
சீனா, COVID கண்காணிப்புத் தகவலைப் பகிர்வதில் உள்ள வெளிப்படைத் தன்மையை கனேடிய பொது சுகாதார அதிகாரிகள் கேள்வி எழுப்பும் நிலையில் இந்த சோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
வியாழக்கிழமை (05) முதல் Vancouver, Toronto சர்வதேச விமான நிலையங்களில் இந்த சோதனைகள் ஆரம்பமாகின்றன.