உலக இளையோர் ஆண்கள் hockey championship தொடரின் இறுதி ஆட்டத்திற்கு கனடிய அணி தகுதி பெற்றுள்ளது.
புதன்கிழமை (04) நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவை கனடா வெற்றி கொண்டது.
அரையிறுதி ஆட்டத்தில் கனடிய அணி 6 க்கு 2 என்ற goal கணக்கில் வெற்றி பெற்றது.
முன்னதாக திங்கட்கிழமை (02) நடைபெற்ற காலிறுதி போட்டியில் Slovakia அணியை கனடிய அணி 4 க்கு 3 என்ற goal கணக்கில் வெற்றி பெற்றது.
இந்த தொடரின் தங்கப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் கனடிய அணி Czechi அணியை எதிர்கொள்கிறது
தங்கப் பதக்கத்திற்கான ஆட்டம் வியாழக்கிழமை (06) மாலை நடைபெறுகிறது.