விடுமுறை காலத்தில் எதிர்கொள்ளப்பட்ட VIA புகையிரதம், விமான போக்குவரத்து சவால்கள் குறித்து விவாதிக்க அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து, உள்கட்டமைப்பு சமூகக் குழுவின் அவசர கூட்டத்திற்கு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
விடுமுறைக் காலத்தில் எதிர்கொள்ளப்பட்ட புகையிரத, விமான போக்குவரத்து சவால்கள் குறித்து
விவாதிக்கவும், இதற்கு பொறுப்பான அமைச்சரிடம் நேரடியாக கேள்விகளை முன் வைக்கவும் இந்த கூட்டம் பரிந்துரைக்கப்பட்டது.
இந்த கோரிக்கை அடங்கிய கடிதம் போக்குவரத்து, உள்கட்டமைப்பு சமூகக் குழுவின் தலைவரும் Liberal நாடாளுமன்ற உறுப்பினருமான Peter Schiefkeக்கு அனுப்பப்பட்டது.
போக்குவரத்து அமைச்சர் Omar Alghabra குறைந்தது இரண்டு மணி நேரம் இந்த குழுவின் சந்திப்பில் கலந்து கொண்டு கேள்விகளை எதிர்கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என இந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.