COVID துணை மாறுபாடு XBB.1.5 தொற்றால் பாதிக்கப்பட்ட 21 பேர் கனடாவில் உறுதி செய்யப்பட்டனர்.
புதன்கிழமை (04) நிலவரப்படி 21 பேர் இந்த துணை மாறுபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் XBB பரவலை அவதானித்து வருவதாக கனடாவின் பொது சுகாதார நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்தது.
கனடாவில் உறுதி செய்யப்பட்ட 21 பேரில் 12 பேர் British Colombia மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
XBB, மிகவும் பரவக்கூடிய COVID துணை மாறுபாடாக உலக சுகாதார நிறுவனத்தால் கருதப்படுகிறது.
புதன்கிழமை வரை 29 நாடுகளில் இந்த புதிய துணை வகை மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளது.