தேசியம்
செய்திகள்

430 ஆயிரம் புதிய குடிவரவாளர்கள் கனடா வருகை!

430 ஆயிரம் புதிய குடிவரவாளர்கள் வருகை மூலம் கனடா புதிய சாதனையை பதிவு செய்துள்ளது.

முன் எப்போதும் இல்லாத எண்ணிக்கையில் புதிய குடிவரவாளர்களை 2022 ஆம் ஆண்டில் கனடா வரவேற்றுள்ளது.

431, 645 புதிய நிரந்தர குடியிருப்பாளர்களின் இலக்கை கனடிய அரசாங்கம் கடந்த ஆண்டு எட்டியுள்ளது.

குடிவரவு, அகதிகள், குடியுரிமை அமைச்சர் Sean Fraser செவ்வாய்க்கிழமை (03) இந்த அறிவித்தலை வெளியிட்டார்.

இது 2021ல் இருந்த கனடாவின் முந்தைய சாதனையை முறியடித்துள்ளதாக அமைச்சர் Fraser தெரிவித்தார்.

இதன் மூலம் COVID தொற்றின் பாதிப்பில் இருந்து மிக வேகமாக மீண்டு வந்த நாடுகளில் ஒன்றாக கனடா விளங்குகிறது எனவும் அவர் கூறினார்.

நிரந்தர குடியிருப்பு, தற்காலிக குடியிருப்பு, குடியுரிமை ஆகியவற்றிற்காக, கனடாவின் குடிவரவு, அகதிகள், குடியுரிமை ஊழியர்கள் சுமார் 5.2 மில்லியன் விண்ணப்பங்களை கடந்த ஆண்டு செயல்முறைக்குள்ளாக்கியுள்ளனர்.

இது 2021ல் செயல்முறைக்கு உள்ளாக்கப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகமானதாகும்.

Related posts

தமிழ்ப் பொது வேட்பாளருக்கு கனடிய தமிழர் தேசிய அவை ஆதரவு

Lankathas Pathmanathan

N.W.T. பயணிகள் விமான விபத்து

Lankathas Pathmanathan

COVID காலத்தில் வெறுப்பு குற்ற அறிக்கைகள் அதிகரிப்பு: புள்ளி விபரத் திணைக்களம்

Lankathas Pathmanathan

Leave a Comment