கனடவுக்குள் நுழையும் சீனா (China), ஹாங்காங் (Hong Kong), மக்காவோ (Macao) விமானப் பயணிகள் COVID தொற்றுக்கு எதிரான சோதனை செய்ய வேண்டும் என மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
மூன்று நாடுகளைச் சேர்ந்த இரண்டு வயதிற்கும் மேற்பட்ட அனைத்து விமானப் பயணிகளுக்கும் இந்த தேவை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் வியாழக்கிழமை (05) முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வருகிறது.
கடந்த சனிக்கிழமை (31) இந்த அறிவித்தலை மத்திய அரசாங்கம் வெளியிட்டது.