உலக இளையோர் ஆண்கள் hockey championship ஆட்டத்தின் மூன்றாவது போட்டியில் கனடிய அணி வெற்றியடைந்தது.
வியாழக்கிழமை (29) நடைபெற்ற மூன்றாவது ஆட்டத்தில் Austria அணியை கனடிய அணி 11 க்கு 0 என்ற goal கணக்கில் வெற்றி பெற்றது.
தமது முதலாவது ஆட்டத்தில் Czech Republic அணியிடம் கனடிய அணி 5 க்கு 2 என்ற goal கணக்கில் தோல்வியடைந்தது.
இரண்டாவது ஆட்டத்தில் ஜெர்மனி அணியை கனடிய அணி 11 க்கு 2 என்ற goal கணக்கில் வெற்றி பெற்றது.
கனடிய அணியின் அடுத்த ஆட்டம் சனிக்கிழமை (31) Sweden அணிக்கு எதிராக நடைபெறுகிறது.
உலக இளையோர் ஆண்கள் hockey championship தொடர் Halifax நகரில் கடந்த திங்கட்கிழமை (27) ஆரம்பமானது.
இந்தத் தொடர் எதிர்வரும் 5ஆம் திகதிவரை தொடரவுள்ளது.