தேசியம்
செய்திகள்

சுட்டுக் கொல்லப்பட்ட OPP அதிகாரி பதுங்கியிருந்து தாக்கப்பட்டார்

செவ்வாய்க்கிழமை (27) சுட்டுக் கொல்லப்பட்ட Ontario மாகாண காவல்துறை அதிகாரி பதுங்கியிருந்து தாக்கப்பட்டார் என OPP ஆணையர் தெரிவித்தார்.

28 வயதான OPP அதிகாரி Grzegorz Pierzchala செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவர் பதுங்கியிருந்து தாக்கப்பட்ட நிலையில் அவருக்கு தன்னை தற்காத்துக் கொள்ள எந்த வாய்ப்பும் இருக்கவில்லை என OPP ஆணையர் கூறினார்.

இவரை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு முன்னர் பிணை மறுக்கப்பட்டது என்பதை நீதிமன்ற ஆவணங்கள் சுட்டிக் காட்டுகின்றன.

குற்றம் சாட்டப்பட்ட 25 வயதான Randall McKenzie கடுமையான நிபந்தனைகளின் கீழ் கடந்த June மாதம் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

ஆனாலும் நீதிமன்ற விசாரணைக்கு செல்லத் தவறியதை அடுத்து, August மாதம் அவரைக் கைது செய்ய ஒரு நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார என தெரியவருகிறது.

Ontario மாகாண காவல்துறை அதிகாரியின் மரணம் குறித்த குற்றச்சாட்டுகள் இருவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.

25 வயதான Randall McKenzie, 30 வயதான Brandi Stewart-Sperry ஆகியோர் மீது முதல் தரக் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

Related posts

மூன்றாவது அலை, முதல் இரண்டை விட மோசமானதாக இருக்கும்!

Gaya Raja

தேர்தலில் இருந்து விலகும் மேலும் இரு வேட்பாளர்கள்!

Gaya Raja

சீன இராஜதந்திரி கனடிய அரசாங்கத்தால் வெளியேற்றம்

Lankathas Pathmanathan

Leave a Comment