தடுப்பூசி எதிர்ப்பாளர்களான செவிலியர்களின் ஒரு மில்லியன் டொலர் அவதூறு நடவடிக்கையை Ontario நீதிபதி நிராகரித்தார்.
மூன்று செவிலியர்கள் இந்த ஒரு மில்லியன் டொலர் அவதூறு நடவடிக்கை வழக்கை பதிவு செய்தனர்.
இந்த செவிலியர்கள் தொற்றின் போது தடுப்பூசிக்கு எதிரான கருத்துக்களுக்காக ஒழுக்காற்று நடவடிக்கையை எதிர்கொண்டனர்.
இந்த வழக்கை ஆச்சரியமானது என நீதிபதி தனது முடிவில் தெரிவித்தார்.
வாதிகள் போதுமான அளவு கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர் என்பதை உறுதிப்படுத்த தவறிவிட்டனர் என தனது முடிவில் மேல் நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார்.
பிரதிவாதிகள் மீது வழக்குத் தொடரும் வாதிகளின் முடிவும் நீதிபதியினால் கேள்விக்குள்ளாக்கப்பட்டது.