சீனாவில் அதிகரித்து வரும் COVID நிலை குறித்து அவதானித்து வருவதாக கனடாவின் பொது சுகாதார நிறுவனம் தெரிவித்தது.
ஆனாலும் சீனாவிலிருந்து வரும் பயணிகளை தொற்றுக்கு பரிசோதிக்கும் திட்டம் குறித்த முடிவுகள் எதனையும் பொது சுகாதார நிறுவனம் அரிவிக்கவில்லை.
இந்த விடயத்தில் கொள்கை மாற்றங்கள் பயண சுகாதார அறிவிப்பில் வெளியாகும் எனவும் கனடாவின் பொது சுகாதார நிறுவனம் ஒரு அறிக்கையில் கூறுகிறது.
சீனா உட்பட அனைத்து நாடுகளுக்கும் ஏற்கனவே “இரண்டாம் நிலை” அறிவிப்பு இருப்பதாக கனடாவின் பொது சுகாதார நிறுவனம் கூறுகிறது.
தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்துதல், பயணத்தைத் தாமதப்படுத்துதல், அதிக ஆபத்துள்ள செயல்களைத் தவிர்ப்பது உள்ளிட்ட சுகாதார முன்னெச்சரிக்கைகளை பயணிகள் கடைப்பிடிக்க வேண்டும் என “இரண்டாம் நிலை” அறிவிப்பு வலியுறுத்துகிறது.
அமெரிக்கா சீனாவில் இருந்து வரும் பயணிகளை COVID சோதனைக்கு உட்படுத்த முடிவு செய்துள்ளது.