பெரும்பான்மையான வாடிக்கையாளர்களுக்கு மின்சாரத்தை மீள வழங்கியுள்ளதாக New Brunswick Power செவ்வாய்க்கிழமை (27) மாலை அறிவித்தது.
40க்கும் குறைவான குடியிருப்பாளர்கள் தொடர்ந்து மின்சாரம் இல்லாத நிலையில் உள்ளனர் எனவும் New Brunswick Power கூறியது.
குளிர்காலப் புயலில் உச்சத்தில், New Brunswick மாகாணத்தில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மின்சாரம் இல்லாத நிலை இருந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 25 ஆண்டுகளில் மாகாணத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய மின் தடைகளில் இது ஒன்றாகும் என New Brunswick Power கூறியது.
British Columbia, Alberta, Saskatchewan மாகாணங்களின் சில பகுதிகளுக்கும் காற்று, பனிப்பொழிவு, உறைபனி மழை எச்சரிக்கைகள் சுற்றுச்சூழல் கனடாவால் வெளியிடப்பட்டுள்ளன.
British Colombia மாகாணத்தின் கடலோர தென்மேற்கு சமூகங்கள் வெள்ள எச்சரிக்கை அபாய கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.