December 12, 2024
தேசியம்
செய்திகள்

Ontarioவில் 11 ஆயிரம் பேர் தொடர்ந்தும் மின்சாரம் இல்லாத நிலையில்

Ontario மாகாணத்தில் 11,000 பேருக்கு மின்சாரம் இல்லாத நிலை தொடர்வதாக Hydro One செவ்வாய்க்கிழமை (27) மாலை தெரிவித்தது.

கடந்த வாரம் குளிர்காலப் புயல் ஆரம்பித்ததில் இருந்து Ontarioவில் 430,000 மேற்பட்ட குடியிருப்பாளர்களுக்கு மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக திங்கட்கிழமை (26) வெளியிடப்பட்ட அறிக்கையில் Hydro One தெரிவித்துள்ளது.

Ontario மாகாணத்தின் Niagara பகுதிக்கு December மாதம் 24ஆம் திகதி அறிவிக்கப்பட்ட அவசர நிலை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.

Parry Sound நகருக்கான பனிமூட்டம் எச்சரிக்கை சுற்றுச்சூழல் கனடாவினால் செவ்வாய் பிற்பகல் விடுக்கப்பட்டது.

Barrie, Grey-Bruce நகரங்களுக்கும் செவ்வாய் பனி மூட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

பனிப்புயல் காரணமாக எதிர்கொள்ளப்பட்ட தாமதத்திற்கு பின்னர் முக்கிய வழித்தடத்தில் புகையிரத சேவையை Via Rail மீண்டும் ஆரம்பித்துள்ளது.

சனிக்கிழமையன்று, CN புகையிரதம் தடம் புரண்டதை அடுத்து, ஞாயிறு, திங்கள் கிழமைகளில் Toronto – Ottawa, Toronto – Montreal புகையிரத சேவையை Via Rail இரத்து செய்திருந்தது.

இந்த சேவைகள் செவ்வாய் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.

Related posts

ரஷ்யாவில் உக்ரைனுக்காக போரிட்ட கனடியர் மரணம்?

Lankathas Pathmanathan

Toronto பாடசாலைகளில் மீண்டும் முககவசம்?

Lankathas Pathmanathan

மூன்று போராட்டங்கள் – காவல்துறை அதிகாரி காயம் – மூன்று பேர் கைது – காவல்துறை அதிகாரி கைது

Lankathas Pathmanathan

Leave a Comment