தேசியம்
செய்திகள்

ஆயிரக்கணக்கான கனேடியர்களுக்கு மின்சாரம் இல்லாத நிலை தொடர்கிறது

கடந்த வாரம் ஆரம்பமான கடுமையான குளிர்காலப் புயல்களை தொடர்ந்து, ஆயிரக்கணக்கான கனேடியர்களுக்கு மின்சாரம் இல்லாத நிலை தொடர்கிறது.

Ontario, Quebec, New Brunswick மாகாணங்களின் சில பகுதிகளில் வசிப்பவர்களுக்கு மின்சாரம் இல்லாத நிலை தொடர்கிறது.

இவர்களுக்கு மின்சாரத்தை மீண்டும் வழங்கும் முயற்சியில் பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

Quebec மாகாணத்தில் 27 ஆயிரம் பேருக்கு மின்சாரம் இல்லாத நிலை தொடர்வதாக Hydro Quebec செவ்வாய்க்கிழமை (27) மாலை தெரிவித்தது.

கடந்த வியாழக்கிழமை (22) இரவு முதல் 670 ஆயிரம் வாடிக்கையாளர்கள் வரை Quebec மாகாணத்தில் மின்சாரத்தை இழந்திருந்தனர் என Hydro Quebec ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தது.

Related posts

2024 Paris Olympics: Hammer throw போட்டியில் கனடா முதல் முறையாக வென்றது தங்கம்

Lankathas Pathmanathan

நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைவதற்கான தடுப்பூசி கட்டுப்பாடுகள் இடை நிறுத்தம்

கனேடிய இராணுவத்திற்கு உதவிய ஆப்கானிய பிரஜைகள் மிகவிரைவில் மீள்குடியேற்றப்படுவார்கள் : கனேடிய அரசாங்கம்

Gaya Raja

Leave a Comment