2026 ஆம் ஆண்டு முதல் கனடாவில் விற்கப்படும் அனைத்து பயணிகள் வாகனங்களில் ஐந்தில் ஒன்று மின்சார வாகனமாக இருக்க வேண்டும் என அரசாங்கம் திட்டம் ஒன்றை வகுத்துள்ளது.
சுற்றுச்சூழல் அமைச்சர் Steven Guilbeault இந்த திட்டத்தை முன்மொழிந்துள்ளார்.
2030ஆம் ஆண்டளவில் கனடாவில் விற்கப்படும்60 சதவீத வாகனங்கள் மின்சாரத்தில் இயங்க வேண்டும் எனவும், 2035ஆம் ஆண்டுக்குள், அனைத்து வாகனமும் மின்சாரமாக இருக்க வேண்டும் எனவும் மத்திய அரசின் திட்டம் குறிப்பிடுகிறது.
இந்த இலக்குகளை பூர்த்தி செய்யாத உற்பத்தியாளர்கள் அல்லது இறக்குமதியாளர்கள் கனடிய சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அபராதங்களை எதிர்கொள்வார்கள்.
இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மின்சார வாகனங்களின் விற்பனை 7.2 சதவீதமாக மாத்திரம் இருந்தது.
2021ஆம் ஆண்டில் விற்பனையான வாகனங்களில் 5.2 சதவீதமானவை மாத்திரமே மின்சார வாகனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.