தேசியம்
செய்திகள்

COVID காரணமாக மரணமடைந்தவர்கள் 92.8 சதவீதமானவர்கள் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள்

கனடாவில் COVID தொற்றின் காரணமாக மரணமடைந்த 90 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் என தெரியவருகிறது.

COVID காரணமாக 46 ஆயிரத்திற்கு அதிகமான மரணங்கள் கனடாவில் பதிவாகியுள்ளது.

இவற்றில் 92.8 சதவீதமானவர்கள் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் என புதிய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கனடாவில் பதிவான மரணங்களில் 0.1 சதவீதமானவை மாத்திரமே 11 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் தெரியவருகிறது.

இறுதியாக வெளியான தகவல்களின் அடிப்படையில் 83.3 சதவீதமான கனடியர்கள் குறைந்தது ஒரு COVID தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

Related posts

அமைச்சரவை மாற்றத்தை வரவேற்கும் ஆசிரியர் சங்கங்கள்

Lankathas Pathmanathan

அவசர சிகிச்சைப் பிரிவை மூட வேண்டும் என்பது சவாலான முடிவாகும்: Ontario சுகாதார அமைச்சர்

Lankathas Pathmanathan

அவசரகாலச் சட்ட விசாரணையில் சாட்சியமளிக்கும் பிரதமர்

Lankathas Pathmanathan

Leave a Comment