December 12, 2024
தேசியம்
செய்திகள்

British Colombiaவில் தொடரும் அவசர கால நிலை

கடுமையான குளிர் காலநிலை, அவசர கால நிலையை British Colombia மாகாணத்தில் ஏற்படுத்தியுள்ளது

British Colombiaவில் 30 cm வரை பனி வீழ்ச்சியடைந்ததால் விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.

அதேவேளை படகு சேவைகளும் செவ்வாய்கிழமை (20) இரத்து செய்யப்பட்டது.

தொடரும் கடும் பனிப்பொழிவு காரணமாக British Colombiaவின் தென் கடற்கரை பகுதியின் குடியிருப்பாளர்களை வீட்டிலேயே இருக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

சுற்றுச்சூழல் கனடா மேற்கு கனடாவின் பெரும் பகுதிக்கு கடுமையான குளிர் எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்ட பகுதி தெற்கு Manitoba முதல் Alberta, British Colombia உட்பட Yukon பகுதியையும் அடக்குகிறது.

Ontario, தெற்கு Quebec ஆகிய பகுதிகளை இந்த வார இறுதியில் கடுமையான புயல் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Toronto பெரும்பாகத்தில் வியாழக்கிழமை (22) பிற்பகுதி முதல் மழை அல்லது பனி மழை பெய்ய ஆரம்பிக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நாட்களில் போக்குவரத்து சவாலாக இருக்கும் எனவும் மின்சார தடைகள் சாத்தியமாகும் எனவும் சுற்றுச்சூழல் கனடா தெரிவித்துள்ளது.

Related posts

உக்ரேனிய புதிய குடிவரவாளர்களின் மீள்குடியேற்றத்திற்கு நிதியளிக்க அழைப்பு

Lankathas Pathmanathan

தொற்றுக்கான அதிக ஒற்றை நாள் எண்ணிக்கை பதிவு

Lankathas Pathmanathan

காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட தீயணைப்பு படை உறுப்பினர் மரணம்

Lankathas Pathmanathan

Leave a Comment