தேசியம்
செய்திகள்

COVID தடுப்பூசிக்கும் வாகன விபத்துக்கும் தொடர்பு?

COVID தொற்றுக்கு எதிராக தடுப்பூசி பெறாத Ontario வாசிகள் விபத்துக்குள்ளாவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாக ஆய்வொன்றில் கண்டறியப்பட்டது.

தடுப்பூசி போட்டவர்களை விட தடுப்பூசி போடப்படாதவர்களுக்கு போக்குவரத்து அபாயங்கள் 50 முதல் 70 சதவீதம் அதிகம் என் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு Sunnybrook மருத்துவமனையில் நடத்தப்பட்டது.

இதன் முடிவுகள் இந்த மாத ஆரம்பத்தில் The American Journal Medicine சஞ்சிகையில் வெளியிடப்பட்டது.

11 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் இந்த ஆய்வில் சேர்க்கப்பட்டனர்.

அந்த பங்கேற்பாளர்களில், சுமார் 16 சதவீதம் பேர் COVID தடுப்பூசியை பெறவில்லை.

இதன் போது 6,600க்கும் மேலதிகமான வாகன விபத்துக்கள் ஆய்வு செய்யப்பட்டன.

Related posts

2024 Paris Olympic: மூன்றாவது தங்கம் வென்ற கனடியர்

Lankathas Pathmanathan

மூன்று மாகாணங்களில் வெப்ப எச்சரிக்கை!

Lankathas Pathmanathan

உண்மைக்கும் நல்லிணக்கத்துக்குமான தேசிய நாளில் விடுமுறைக்காக பயணம் மேற்கொண்டது தவறு: Trudeau

Gaya Raja

Leave a Comment