தேசியம்
செய்திகள்

சராசரி வாடகை இரண்டாயிரம் டொலர்களை தாண்டியது!

கடந்த மாதம் சராசரி வாடகை மாதாந்தம் இரண்டாயிரம் டொலர்களை தாண்டியது.

ஒரு வீட்டை வாடகைக்கு பெறுவதற்கான சராசரி மாதச் செலவு கடந்த மாதம் இரண்டாயிரத்து 24 டொலர்களாக உயர்ந்துள்ளதாக புதிய தரவுகள் சுட்டிக் காட்டுகிறது.

October மாதத்தில் இருந்து இது 2.5 சதவீதம் அதிகரித்துள்ளது.

நேற்று வெளியிடப்பட்ட தேசிய வாடகை அறிக்கையில் இந்த தரவுகள் வெளியாகின.

நாடு முழுவதும் சராசரி வாடகை November மாதத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்ததாக இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

சராசரி மாத வாடகையும் ஒரு வருடத்திற்கு முன்னர் இருந்ததை விட 224 டொலர்கள் அதிகமாக இருந்தது.

இது 12.4 சதவீதம் அதிகமானதாகும்.

இந்த அதிகரிப்பு விரைவில் குறைவதற்கான அறிகுறிகள் இல்லை என நிபுணர்கள் கூறுகின்றனர்.

கனடாவில் வாடகை மிகவும் விலையுயர்ந்த இடமாக Vancouver உள்ளது.

Toronto இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

Related posts

மீண்டும் திறக்கும் சில திட்டங்களை இடைநிறுத்தியது Ontario!

Gaya Raja

Hydro வெடிப்பின் காரணமாக இரண்டு தொழிலாளர்கள் காயம்

Lankathas Pathmanathan

ருவாண்டாவில் தூதரகம் ஒன்றை திறக்கும் கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment