மத்திய அரசு ஊழியர்கள் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் அலுவலகம் திரும்ப வேண்டிய நிலை தோன்றியுள்ளது.
கருவூல வாரியத் தலைவர் Mona Fortier வியாழக்கிழமை (15) இந்த அறிவித்தலை விடுத்தார்.
அனைத்து துறைகளிலும் முக்கிய பொதுச் சேவையில் உள்ள ஊழியர்கள், January நடுப்பகுதியில் அலுவலகத்திற்கு திரும்பும் திட்டத்தை படிப்படியாக ஆரம்பிக்க வேண்டும் என அவர் அறிவித்தார்.
இது வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் அல்லது அவர்களின் வழக்கமான அட்டவணையில் 40 முதல் 60 சதவீதம் வரை அலுவலகத்தில் வேலை செய்வதாக அமையும்.
இந்தத் திட்டம் எதிர்வரும் March இறுதிக்குள் முழுமையாக செயல்படுத்தப்படும் என Fortier கூறினார்.