தேசியம்
செய்திகள்

Ontario, Quebec, Saskatchewan, Manitoba மாகாணங்களுக்கு சிறப்பு வானிலை அறிக்கை

Ontario, Quebec, Saskatchewan, Manitoba ஆகிய மாகாணங்களுக்கு சுற்றுச்சூழல் கனடா சிறப்பு வானிலை அறிக்கைகளை வெளியிட்டுள்ளது.

இந்த மாகாணங்களை நோக்கி கடுமையான புயல் நகர்கின்றது.

Saskatchewan, Manitoba ஆகிய மாகாணங்களும் வடக்கு Ontarioவும் பனி பொழிவை எதிர்கொள்கிறது.

தெற்கு Ontarioவில் உறைபனி மழை சாத்தியமாகும் என கூறப்படுகிறது.

Toronto பெரும்பாகத்தில் வியாழக்கிழமை (15) காலை உறைபனி மழை எதிர்வு கூறப்படுகிறது.

இது பிற்பகலில் பனி மழையாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பனிப்புயல் கிழக்கு நோக்கி நகர்ந்து Quebec மாகாணத்தில் பனி பொழிவை ஏற்படுத்தும்.

Nova Scotia, New Brunswick, P.E.I., Newfoundland ஆகிய மாகாணங்களை செவ்வாய்க்கிழமை (13) ஒரு பனிப்புயல் தாக்கியது குறிப்பிடத்தக்கது

இந்த புயலின் காரணமாக New Brunswick கிழக்கு, வடக்குப் பகுதிகளில் உள்ள பாடசாலைகள் புதன்கிழமை (14) மூடப்பட்டிருந்தன.

அதேபோல் P.E.I. இல் உள்ள அனைத்து பாடசாலைகளும் புதனன்று மூடப்பட்டிருந்தன.

Related posts

தொழிலாளர் அமைச்சருக்கு COVID உறுதி

Lankathas Pathmanathan

பெரும்பான்மையான வாடிக்கையாளர்களுக்கு மின்சாரத்தை மீள வழங்கியுள்ளோம்: New Brunswick Power

Lankathas Pathmanathan

Saskatchewan நகரின் காவல்துறை தலைவர் பதவி விலகல்

Lankathas Pathmanathan

Leave a Comment