எப்போதும் சாதாரண மக்களின் பக்கம் நிற்பது எதிர்க்கட்சியின் கடமை என Conservative கட்சியின் தலைவர் தெரிவித்தார்.
விடுமுறை காலத்தின் முன்னர் தனது கட்சி உறுப்பினர்கள் முன்னிலையில் Pierre Poilievre புதன்கிழமை (14) உரை ஆற்றினார்.
பிரதமர் Justin Trudeau தலைமையிலான Liberal அரசாங்கம் தோல்வியடைந்ததாக தான் கருதும் விடயங்களின் பட்டியலை அவர் வெளியிட்டார்.
போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் மரணங்கள் உட்பட பொது பாதுகாப்பு கவலைகள் குறித்தும் Conservative தலைவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
கனடிய சுகாதார பராமரிப்பின் நிலை குறித்த தனது கவலைகளையும் Poilievre வெளியிட்டார்.