தேசியம்
செய்திகள்

Alberta முதல்வர் பிரிவினைக்கு அடித்தளமிடுகிறார்?

மத்திய அரசாங்கத்தின்  அதிகாரத்தை Alberta முதல்வர் நிராகரித்தது பிரிவினைக்கான அடித்தளத்தை அமைக்கிறது என பிரதான எதிர்க்கட்சி தெரிவிக்கிறது.

Alberta மாகாண NDP தலைவர் Rachel Notley இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மத்திய அரசின் சட்டபூர்வமான தன்மையை நிராகரிக்கும் முதல்வர் Danielle Smithதின் கருத்துக்கள், பிரிவினைக்கான அடித்தளத்தை அமைப்பதற்கான அவரது பேசப்படாத திட்டத்தை காட்டிக் கொடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறுகிறார்.

இறையாண்மை மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன்னர் முதல்வர் Smith முன்வைத்த கருத்துகளை Notley மேற்கோள் காட்டினார்.

Ottawa ஒரு தேசிய அரசாங்கம் இல்லை என Smith வியாழன் நள்ளிரவு சட்டசபையில் தெரிவித்திருந்தார்.

இந்த கருத்தின் மூலம் பிரிவினையை நோக்கிய ஆரம்ப நடவடிக்கைகளை உண்மையாகத் தொடர்வதில் முதல்வரின் ஆர்வம் வெளிப்பட்டது என Notley கூறினார்.

ஆனாலும் தனது சட்டமூலம் ஒரு பிரிவினைவாத முயற்சி என்ற குற்றச்சாட்டை Smith தொடர்ந்தும் நிராகரித்து வருகிறார்

Related posts

Quebecகில் புதிய இடைக்கால பொது சுகாதார இயக்குநர் நியமனம்

Lankathas Pathmanathan

Saskatchewan மாகாணம் 2026-27ஆம் ஆண்டுக்குள் சமநிலைக்குத் திருப்பும்: நிதி அமைச்சர்

Lankathas Pathmanathan

முக்கிய வட்டி விகிதம் மேலும் அரை சதவீதம் உயரக்கூடும்

Lankathas Pathmanathan

Leave a Comment