தேசியம்
செய்திகள்

Albertaவின் இறையாண்மை சட்டம் நிறைவேற்றப்பட்டது!

Alberta மாகாண அரசின் இறையாண்மை சட்டம் நிறைவேற்றப்பட்டது.

முதல்வர் Danielle Smithத்தின் சர்ச்சைக்குரிய இறையாண்மை சட்டத்தை Alberta சட்டமன்றம் நிறைவேற்றியது.

வியாழக்கிழமை (08) அதிகாலை 1 மணியளவில் நடைபெற்ற வாக்கெடுப்பில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது.

United Conservative கட்சி தனது பெரும்பான்மையை பயன்படுத்தி இந்த சட்ட மூலத்தை நிறைவேற்றியது.

27 United Conservative கட்சி உறுப்பினர்கள் இந்த சட்ட மூலத்திற்கு ஆதரவாகவும், 7 NDP உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர்.

இதனை கொடூரமான, ஜனநாயகத்திற்கு விரோதமான சட்டம் என NDP தலைவர் Rachel Notley விமர்சித்தார்.

அடுத்த தேர்தலில் NDP ஆட்சி அமைத்தால், இந்த சட்டத்தை இரத்து செய்ய நடவடிக்கை எடுப்போம் என அவர் கூறினார்.

ஆனாலும் இந்த சட்டமூலத்தில் அமைச்சரவைக்கு சட்டமியற்றும் அதிகாரம் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் சுதேச ஒப்பந்த உரிமைகள் மீதான இந்த இறையாண்மை சட்டத்தின் தாக்கம் குறித்து பிரதமர் Justin Trudeau கவலை தெரிவித்தார்.

Related posts

கனடாவிற்கு புலம் பெயரும் பல புதிய குடியேற்றவாசிகள் சில வருடங்களில் மீண்டும் கனடாவை விட்டு வெளியேறுகின்றனர்: கனடிய புள்ளி விவர திணைக்களம்

Lankathas Pathmanathan

கடந்த வாரம் சுட்டுக் கொல்லப்பட்ட OPP அதிகாரியின் இறுதிச் சடங்கு

Lankathas Pathmanathan

வேலை வெற்றிடங்கள் முன்னெப்போதும் இல்லாத உயர்வை எட்டியது

Lankathas Pathmanathan

Leave a Comment