தேசியம்
செய்திகள்

சீனாவுடன் தொடர்புடையதாக கூறப்படும் நிறுவனத்திற்கு RCMP ஒப்பந்தம்: பிரதமர் அதிருப்தி

சீனாவுடன் தொடர்புடையதாக கூறப்படும் நிறுவனத்திற்கு RCMP ஒப்பந்தம் ஒன்று வழங்கப்பட்டது அதிருப்தி அளிப்பதாக பிரதமர் Justin Trudeau தெரிவித்தார்.

இந்த ஒப்பந்தத்தை, கனடிய அரசாங்கம் மறுபரிசீலனை செய்வதாக பிரதமர் புதன்கிழமை (07) கூறினார்.

மத்திய கொள்முதல் துறை கடந்த ஆண்டு Ontarioவை தளமாகக் கொண்ட Sinclair Technologies என்ற நிறுவனத்திற்கு ரேடியோ அலைவரிசை வடிகட்டுதல் அமைப்பை உருவாக்கி பராமரிக்க $550,000 பெறுமதியான ஒப்பந்தத்தை வழங்கியது.

Sinclair Technologies தாய் நிறுவனமான Norsat International, 2017 முதல் சீன தொலைத் தொடர்பு நிறுவனமான Hyteraவுக்குச் சொந்தமானது.

ஒரு முதலீட்டு நிதி மூலம் Hyteraவின் 10 சதவீதத்தை சீன அரசாங்கம் கொண்டுள்ளது.

கனேடிய நிறுவனங்களில் வெளிநாட்டு தலையீடுகள் குறித்து சில அரசாங்க பாதுகாப்பு நிறுவனங்கள் எச்சரித்துள்ள நிலையில், சிவில் சேவையின் ஒரு பகுதி RCMPக்கான ஒப்பந்தத்தை இதுபோன்ற வெளிநாட்டு தலையீடு கொண்ட நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது குறித்து பிரதமர் அதிருப்தி வெளியிட்டார்

மத்திய அரசின் ஒப்பந்தங்கள் கனடாவை பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு ஆளாக்கவில்லை என்பதை உறுதிப்படுத்த தனது அரசாங்கம் செயல்முறையை மறுபரிசீலனை செய்ய திட்டமிட்டுள்ளதாக Trudeau கூறினார்.

இந்த ஒப்பந்தம் குறித்தும் அது வழங்கப்பட்ட செயல்முறை குறித்தும் உன்னிப்பாக கவனிக்குமாறு தனது அமைச்சு ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் Marco Mendicino கூறினார்.

Related posts

இலங்கையில் குற்றம் புரிந்தோர் தண்டிக்கப்படாத நிலை குறித்து கவலை: Lawyers’ Rights Watch கனடா

Lankathas Pathmanathan

நான்கு தொகுதிகளில் திங்கட்கிழமை இடைத் தேர்தல்!

Lankathas Pathmanathan

கனடாவின் உச்ச நீதிமன்றத்திற்கு முதலாவது முதற்குடி நபர் தெரிவு

Lankathas Pathmanathan

Leave a Comment