உக்ரைனில் கண்ணி வெடிகளை அகற்ற கனடிய அரசாங்கம் 15 மில்லியன் டொலர் நிதியை உறுதியளித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சர் Melanie Joly செவ்வாய்க்கிழமை (06) இந்த அறிவித்தலை வெளியிட்டார்.
பெரும்பாலான நாடுகளில் கண்ணி வெடிகளைத் தடை செய்யும் Ottawa ஒப்பந்தத்தின் 25வது ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் Joly இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
ரஷ்யா நூற்றுக்கணக்கான கண்ணி வெடிகளை புதைத்து வைத்துள்ள நிலையில் நாட்டை பாதுகாப்பானதாக மாற்றுவதற்காக இந்த நிதியுதவி அளிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
உக்ரேனியப் படைகளும் நாடு முழுவதும் எதிர்ப்பு கண்ணிவெடிகளை புதைத்து வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறுகிறது.
தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளில் இருந்து கண்ணிவெடிகள் அகற்ற கனடா நிதியுதவியை கடந்த மாதம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.