COVID தடுப்பூசி வீணாக்கப்படுவதை கட்டுப்படுத்துவதில் கனடா தோல்வியுற்றது என புதிய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
மத்திய அரசின் தடுப்பூசி கொள்முதல் குறித்த கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை செவ்வாய்க்கிழமை (06) வெளியானது.
ஒரு பில்லியன் டொலர் மதிப்புள்ள COVID தடுப்பூசிகள் விரைவில் காலாவதியாகிவிடும் என கணக்காய்வாளர் நாயகம் Karen Hogan வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த அறிக்கை, அவசர சூழ்நிலையில் தொற்று தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதில் மத்திய அரசு வெற்றி பெற்றது என தெரிவிக்கிறது.
ஆனாலும் வீணடிக்கப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கையை குறைக்கும் முயற்சியில் கனடாவின் பொது சுகாதார நிறுவனம் தோல்வியடைந்துள்ளது என இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
மில்லியன் கணக்கான தடுப்பூசிகள் காலாவதியாகியுள்ளதாக கணக்காய்வாளர் நாயகத்தின் இந்த அறிக்கை கூறுகிறது.
85 மில்லியன் COVID தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவில்லை எனவும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இவற்றுள் 50.6 மில்லியன் தடுப்பூசிகள் உபரியாக கருதப்பட்டு நன்கொடைக்காக அளிக்கப்பட்டது.
ஆனாலும் ஏனைய நாடுகளுக்கு 15.3 மில்லியன் தடுப்பூசிகள் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளன.
13.6 மில்லியன் தடுப்பூசிகள் நன்கொடை வழங்கப்படுவதற்கு முன்பே காலாவதியானது என கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை தெரிவித்தது.