கனடிய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட COVID-19 நிதி உதவியில் 4.6 பில்லியன் டொலர்கள் தகுதியற்ற பெறுநர்களுக்குச் சென்றுள்ளது என புதிய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
செவ்வாய்க்கிழமை (06) வெளியான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் இந்த தகவல் வெளியானது.
மத்திய அரசு அவசரகால உதவி நிதி வழங்கலை திறம்பட கையாண்டதாக கணக்காய்வாளர் நாயகம் Karen Hogan தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.
ஆனாலும் உதவி நிதி பெறுபவர்களின் தகுதி சரிபார்க்கப்படாத முடிவின் விளைவாக தகுதியற்ற நபர்களுக்கு 4.6 பில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டுள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.
கனடிய அரசாங்கம் 211 பில்லியன் டொலர் COVID-19 உதவி தொகையை வழங்கியுள்ளதாக மதிப்பிடப்படுகிறது
இந்த பல பில்லியன் டொலர் பண இழப்புக்கு Liberal அரசாங்கம் பெறுப்பு என Conservative கட்சி குற்றம் சாட்டியுள்ளது.