தேசியம்
செய்திகள்

கனடாவின் வேலையற்றோர் விகிதம் குறைந்தது

கனடாவின் வேலையற்றோர் விகிதம் 5.1 சதவீதமாக குறைந்துள்ளது.

வெள்ளிக்கிழமை (02) கனடிய புள்ளிவிபரத் திணைக்களத்தின் வேலையற்றோர் விகித அறிக்கை வெளியானது.

அதில் November மாதத்தின் வேலையற்றோர் விகிதம் 5.1 சதவீதமாக குறைந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

மூன்று மாதங்களில் இரண்டாவது முறையாக வேலையற்றோர் விகிதம் குறைந்துள்ளதாக புள்ளி விபர திணைக்களம் கூறுகிறது.

Newfoundland and Labrador மாகாணத்தில் அதிகூடிய வேலையற்றோர் விகிதமும் Quebec மாகாணத்தில் அதிகுறைந்த வேலையற்றோர் விகிதமும் பதிவாகியுள்ளது.

புதிதாக 10 ஆயிரம் தொழில் வாய்ப்புகள் மாத்திரமே November மாதம் கனடாவில் உருவாக்கப்பட்டுள்ளன.

October மாதத்தில் 108 ஆயிரம் புதிய தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

இதற்கிடையில், ஊதியங்கள் கடந்த ஆறு மாதங்களில் தொடர்ச்சியாக ஆறாவது அதிகரிப்பை கடந்த மாதம் கண்டன.

November மாதத்தில் சராசரி ஊதியம் ஆண்டுக்கு ஆண்டு 5.6 சதவீதம் உயர்ந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

LGBTQ எதிர்ப்பு கருத்துக்காக Blue Jays அணி உறுப்பினர் நீக்கம்

Lankathas Pathmanathan

3.1 சதவீதத்தில் நிலையாக உள்ள பணவீக்க விகிதம்

Lankathas Pathmanathan

Manitobaவில் விரைவில் அமைச்சரவை மாற்றம்

Lankathas Pathmanathan

Leave a Comment