தேசியம்
செய்திகள்

கனடாவுக்கான சீனத் தூதரை பல முறை விசாரணைக்கு அழைத்த கனடிய வெளிவிவகார அமைச்சு

கனடாவில் இயங்குவதாக கூறப்படும் இரகசிய காவல் நிலையங்கள் குறித்து விளக்கமளிக்க கனடிய வெளிவிவகார அமைச்சு கனடாவுக்கான சீனாவின் தூதர் Cong Peiwuரை பலமுறை அழைத்துள்ளது என தெரியவருகிறது.

இரகசிய காவல் நிலையங்கள் கனடாவில் உள்ள சீன நாட்டவர்களை குறிவைப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் தமது அமைச்சு பலமுறை சீனாவின் தூதரை அழைத்து பேசியதாக வெளிவிவகார அமைச்சின் வடகிழக்கு ஆசியாவிற்கான பொது இயக்குனர் Weldon Epp தெரிவித்தார்.

சமீபத்திய வாரங்களில், கனடாவுக்கான சீனத் தூதரை பலமுறை இந்த விடயம் குறித்து வெளிவிவகார அமைச்சு அழைத்ததாக அவர் கூறினார்.

இந்த விடயத்தில் சீன தூதரிடம் பலமுறை எங்களது கவலையை தெரிவித்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.

கனடாவிற்குள் நடக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும் சீனத் தூதர், அவரது தூதரகம் உட்பட சீன அரசாங்கம் பெறுப்பாக இருக்க வேண்டும் என கனடிய அரசாங்கம் முறையாக வலியுறுத்தியுள்ளது என அவர் தெரிவித்தார்.

இந்தத் தகவலை கனடிய அரசாங்கம் வெளிப்படையாக வெளியிட்டிருக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.

சீன தூதரை அழைத்ததை பொதுமக்களிடம் வெளிவிவகார அமைச்சு கூறியிருக்க வேண்டும் என Conservative கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறினர்.

இந்த விடயம் குறித்து விசாரித்து வருவதாக கடந்த மாதத்தின் ஆரம்பத்தில் RCMP தெரிவித்திருந்தது

October மாத ஆரம்பத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களிடன் RCMP அதிகாரிகள் இந்த விடயம் குறித்து தெரிவித்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

கடந்த மாதம் இந்தோனேசியாவில் நடைபெற்ற G20 மாநாட்டில் சீன அதிபரிடம் நேரடியாக இந்த விடயம் குறித்து பேசியதாக பிரதமர் Justin Trudeau கூறியிருந்தார்.

Related posts

Alberta முதல்வர் பதவி விலக வேண்டும் – அதிகரிக்கும் அழுத்தம்!

Gaya Raja

சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு வரிசையில் கனடா பின்னடைவு!

Lankathas Pathmanathan

Hockey கனடாவுக்கு புதிய தலைமை தேவை!

Lankathas Pathmanathan

Leave a Comment