February 23, 2025
தேசியம்
செய்திகள்

Markham வீதி விபத்தில் காயமடைந்த தமிழ் பெண் மரணம்

கடந்த October மாதம் Markham நகரில் நிகழ்ந்த வீதி விபத்தில் காயமடைந்த தமிழ் பெண் சிகிச்சை பலனளிக்காத நிலையில் மரணமடைந்தார்.

October மாதம் 12ஆம் திகதி Markham நகரில் நிகழ்ந்த வீதி விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு தமிழர்கள் மரணமடைந்தனர்.

Markham Road and Elson Street சந்திப்புகளுக்கு அருகாமையில் நிகழ்ந்த விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

மூன்று பேர் பயணித்த Acura வாகனத்துடன் பார ஊர்தி மோதியதில் வாகனத்தின் சாரதியான 21 வயதான இளைஞனும், பின் இருக்கையில் பயணித்த 23 வயதுடைய பெண்ணும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.

முன் இருக்கையில் பயணித்த மூன்றாவது பயணியான 52 வயது பெண் உயிர் ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்த பெண் புதன்கிழமை (30) மரணமடைந்தார்.

இதில் பாதிக்கப்பட்டவர்களின் பெயர்கள் காவல்துறையினரால் வெளியிடப்படவில்லை.

ஆனாலும் பலியானவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், இரண்டு பிள்ளைகள் என தெரியவருகிறது.

இந்த வாகன விபத்தில் Vaughan நகரை சேர்ந்த 46 வயதான பார ஊர்தி ஓட்டுநர் மீது ஏற்கனவே மூன்று குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.

இவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை எதிர்வரும் 29ஆம் திகதி நீதிமன்றத்தில் எதிர் கொள்ளவுள்ளார்.

Related posts

புதிய COVID மாறுபாடுகள் குறித்து விமான கழிவு நீரில் சோதனை

Lankathas Pathmanathan

தமிழ் நடை பயணக் குழுவினரை அடுத்த வாரம் சந்திக்கவுள்ள Ontario முதல்வர்

Gaya Raja

பாலஸ்தீனர்களின் சுயநிர்ணய உரிமையை கனடா ஆதரிக்கிறது: அமைச்சர் Mélanie Joly

Lankathas Pathmanathan

Leave a Comment