தேசியம்
செய்திகள்

சீனாவில் அரச எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபடுபவர்களுக்கு பிரதமர் Trudeau ஆதரவு

சீனாவில் எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபடுபவர்களுக்கான ஆதரவை கனடிய பிரதமர் Justin Trudeau வெளிப்படுத்துகின்றார்.

COVID மீதான சீன அரசாங்கத்தின் ஒடுக்குமுறைக்கு மத்தியில் சீனாவில் உள்ள அனைவரும் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்த அனுமதிக்க வேண்டும் என பிரதமர் கூறுகிறார்.

தொற்று தடுப்பு கட்டுப்பாடுகளால் கோபமடைந்த மக்கள் பல தசாப்தங்களில் மிகப்பெரிய பகிரங்க எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றனர்.

தொடர் போராட்டங்களை முன்னெடுக்கும் மக்கள் சீன குடியரசின் அரசுத் தலைவரை பதவி விலக அழைப்பு விடுத்துள்ளனர்.

போராட்டங்களில் ஈடுபட்ட பலரையும் பாதுகாப்புப் படையினர் தடுத்து வைத்துள்ளனர்.

தவிரவும் BBC பத்திரிகையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சீனாவில் தொடரும் நிலைமைகளை கனடியர்கள் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருவதாக கூறிய Trudeau, மனித உரிமைகள் குறித்த விடயங்களில் சீனா மீது கனடா தொடர்ந்து அழுத்தங்களை பிரயோகிக்கும் என தெரிவித்தார்.

Related posts

ஒலிம்பிக் போட்டியில் கனடா முதலாவது தங்கம் வென்றது

Gaya Raja

கைத்துப்பாக்கிகளை இறக்குமதி செய்வதை தற்காலிகமாக தடை செய்யும் கனடா

B.C. குற்றவியல் குழுவொன்றின் 8 பேர் கைது

Lankathas Pathmanathan

Leave a Comment