ரஷ்யாவின் போர்க் குற்ற விசாரணைகளை ஒருங்கிணைக்க G7 நாடுகளுடன் இணைய கனடா உறுதியளித்துள்ளது.
போர்க் குற்றங்கள் தண்டனையிலிருந்து விலக்கு இல்லை என்பதை வலியுறுத்தும் Berlin பிரகடனத்தை G7 நாடுகளின் நீதி அமைச்சர்களுடன் இணைந்து கனடிய நீதி அமைச்சர் David Lametti வெளியிட்டார்.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் ஆரம்பித்த உக்ரைன் மீதான போரைத் தொடர்ந்து இந்த பிரகடனம் செவ்வாய்க்கிழமை (29) வெளியிடப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் படையெடுப்பிற்கு மத்தியில் உக்ரைனில் நடந்ததாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை ஒருங்கிணைக்க கனடா G7 நாடுகளுடன் இணைந்து செயல்படும் என அமைச்சர் Lametti தெரிவித்தார்.