வெளிநாட்டு இறக்குமதிகள் மூலம் அடுத்த மூன்று வாரங்களில் 500 ஆயிரம் குழந்தைகள் மருந்து கனடாவை வந்தடையவுள்ளது.
அதிகரித்து வரும் காய்ச்சல், சுவாச ஒத்திசைவு தொற்றுகளுக்கு மத்தியில் வெள்ளிக்கிழமை (25) இந்த அறிவித்தலை மத்திய அரசாங்கம் வெளியிட்டது.
ஏற்கனவே வெளிநாட்டு இறக்குமதி மூலம் இந்த வாரம் ஒரு மில்லியன் குழந்தைகளுக்கான மருந்துகள் கனடாவை வந்தடைந்துள்ளன.
November மாதம் இதுவரை உள்நாட்டில் சுமார் 1.1 மில்லியன் குழந்தைகளுக்கான மருந்துகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் Jean-Yves Duclos செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
உள்நாட்டில் கடந்த சில வாரங்களாக உற்பத்தி இருமடங்காக அதிகரித்துள்ளது என அமைச்சர் Duclos கூறினார்.