தேசியம்
செய்திகள்

Ontarioவில் COVID தொற்றின் செயல்பாடு குறைகிறது!

Ontario மாகாணத்தில் COVID தொற்றுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,166 ஆக குறைந்துள்ளது.

வியாழக்கிழமை (24) மாகாண சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட சமீபத்திய தரவுகளின் இந்த தகவல் வெளியானது.

கடந்த வாரம் Ontario மருத்துவமனைகளில் 1,390 பேர் COVID தொற்றுக்கு சோதனை செய்ததை விட இது 16 சதவீதம் குறைந்துள்ளது.

கடந்த ஏழு நாட்களில், Ontario ஆய்வகங்களால் செயலாக்கப்பட்ட PCR சோதனைகளில் சராசரியாக 10.5 சதவீதம் தொற்றை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த எண்ணிக்கை முந்தைய வாரத்தில் 11.6 சதவீதமாகவும், இரண்டு வாரங்களுக்கு முன்னர் 13.7 சதவீதமாகும் இருந்தது.

Ontarioவில் பெரும்பாலான பொது சுகாதார குறிகாட்டிகள் COVID தொற்றின் செயல்பாடு குறைவதை தொடர்ந்து சுட்டிக்காட்டுகின்றன.

ஆனாலும் குழந்தைகள் மருத்துவமனைகள் காய்ச்சல், RSV போன்ற பிற சுவாச நோய் தொற்றுகளைக் கொண்ட நோயாளிகளின் வருகையை எதிர்கொள்ள போராடுகின்றன.

Related posts

ஏழு நாட்களில் 109 புதிய COVID இறப்புகள் Ontarioவில் பதிவு

Lankathas Pathmanathan

பெலாரஸ் மீதான புதிய தடைகளை கனடா அறிவித்தது

Lankathas Pathmanathan

சீனாவுக்கு எதிரான கனடாவின் பொருளாதாரத் தடை

Gaya Raja

Leave a Comment