தேசியம்
செய்திகள்

உலகக் கோப்பை ஆரம்ப ஆட்டத்தில் கனடிய அணி தோல்வி

உலகக் கோப்பை ஆரம்ப ஆட்டத்தில் வாய்ப்புகளை தவறவிட்ட கனடிய அணி தோல்வியடைந்தது.

புதன்கிழமை (23) ஆட்டத்தில் பெல்ஜியத்திடம் 1-0 என்ற கோல் கணக்கில் கனடா தோல்வியடைந்தது.

36 ஆண்டுகளுக்குப் பின்னர் கனடாவின் முதலாவது உலகக் கோப்பை உதைபந்தாட்ட ஆட்டம் இன்று நடைபெற்றது.

இன்றைய நிலையில் கனடா பங்கேற்கும் F பிரிவில் பெல்ஜியம் மூன்று புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

குரோஷியா, மொராக்கோ ஆகிய அணிகள் தலா ஒரு புள்ளிகள் பெற்றுள்ளன.

கனடா புள்ளிகள் எதையும் பெறாமல் தரவரிசையில் இறுதியில் உள்ளது.

கனடா தனது அடுத்த ஆட்டத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (27) குரோஷியா அணியை எதிர்கொள்கிறது.

Related posts

Scarborough வடக்கு நகரசபை உறுப்பினர் மரணம்

Lankathas Pathmanathan

15 வயது சிறுவன் RCMP அதிகாரிகளால் சுட்டுக் கொலை

Lankathas Pathmanathan

கனடிய வரலாற்றில் முதன்முறையாக செயல்படுத்தப்பட்டது அவசரகாலச் சட்டம்

Lankathas Pathmanathan

Leave a Comment