December 12, 2024
தேசியம்
செய்திகள்

New Brunswick அவசர சிகிச்சை பிரிவில் காத்திருந்த நோயாளி மரணம்

New Brunswick மாகாண அவசர சிகிச்சை பிரிவில் காத்திருந்த நோயாளி ஒருவர் மரணமடைந்தார்.

Moncton மருத்துவமனையின் அவசர பிரிவில் இந்த மரணம் நிகழ்ந்தது.

இந்த நோயாளி செவ்வாய்க்கிழமை இரவு (22) மருத்துவமனையில் தீவிரமான உடல்நலக் குறைவுடன் அனுமதிக்கப்பட்டதாக தெரியவருகிறது.

சில ஆரம்ப பரிசோதனைகள் முடிக்கப்பட்டு மருத்துவரால் மதிப்பீடு செய்யப்படுவதற்காக காத்திருந்த போது அவரது உடல் நிலை திடீரென மோசமடைந்ததாக கூறப்படுகிறது.

நோயாளி புத்துயிர் வழங்கப்படும் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் வைத்தியர்கள் முயற்சிகள் பலனளிக்கவில்லை.

New Brunswick சுகாதாரப் பிரிவு, குறிப்பாக அதன் அவசர சிகிச்சைப் பிரிவுகள், கடந்த சில மாதங்களாக டு பணியாளர் பற்றாக்குறை காரணமாக பல சிரமத்திற்கு உள்ளாகியுள்ளன.

Related posts

வதிவிட பாடசாலைகளில் இருந்து தப்பியவர்கள் வலியை உணர்ந்தேன்: திருத்தந்தை

February மாதம் கனடா முழுவதும் கடுமையான குளிர்?

Lankathas Pathmanathan

Alberta முதல்வரின் Facebook பக்கம் முடக்கம்?

Lankathas Pathmanathan

Leave a Comment