16 ஆண்டுகளில் கடந்த வருடம் மிக அதிகமான குழு வன்முறை தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளதாக கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்தது
2021ஆம் ஆண்டில் கொலைகள் அதிகரித்துள்ளதாகவும், அவற்றில் கால் பகுதி குழு வன்முறை தொடர்பானவை எனவும் புள்ளிவிவரத் திணைக்கள தரவுகள் காட்டுகின்றன.
கடந்த ஆண்டு மொத்தம் 788 கொலைகள் நிகழ்ந்துள்ளதாக புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்தது.
இது 2020ஆம் ஆண்டை விட மூன்று சதவீதம் அதிகமானதாகும்.
இவற்றில் 184 கொலைகள் குழு வன்முறை தொடர்பானவையாகும்.
இது 2005ஆம் ஆண்டுக்குப் பின்னர் குழு வன்முறை தொடர்பான கொலைகளின் அதிகபட்ச விகிதத்தைக் குறிக்கிறது.