வீட்டு உரிமையாளர்கள் வெப்ப விசையியக்கக் குழாய்களுக்கு மாறுவதற்கு கனடிய அரசாங்கம் $250 மில்லியன் மானியத்தை அறிவித்துள்ளது.
கனேடியர்கள் தங்கள் வீடுகளை எண்ணெய் மூலம் சூடாக்குவதை நிறுத்தவும், மின்சார வெப்ப குழாய்களுக்கு மாறவும் உதவும் நோக்கில் $250 மில்லியன் மானிய திட்டத்திற்கு விரைவில் விண்ணப்பிக்க முடியும் என மத்திய அரசாங்கம் திங்கட்கிழமை (21) அறிவித்தது.
இந்த மானியம் மூலம் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட வீட்டு உரிமையாளர்களுக்கு 5,000 டொலர்கள் வரை வழங்கப்படும் என குடிவரவு அமைச்சர் Sean Fraser கூறினார்.
இந்த பணம், வெப்ப குழாய்களை நிறுவுதல், புதிய உபகரணங்களுக்கு தேவையான மின் மேம்படுத்தல்கள், எண்ணெய் தொட்டிகளை அகற்றுதல் போன்ற செலவுகளை ஈடு செய்யும் என அமைச்சர் கூறினார்.
தகுதியான வீட்டு உரிமையாளர்கள் புதிய மானியத்தை தற்போது உள்ள மத்திய, மாகாண உதவி திட்டங்களுடன் இணைந்து பெற முடியும் என அமைச்சர் கூறினார்.