தேசியம்
செய்திகள்

கனடிய தமிழர் பேரவைக்கு இலங்கை அரசாங்கம் அழைப்பு!

கனடிய தமிழர் பேரவையின் தலைவரையும் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளரையும் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு இலங்கை அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

கனடிய தமிழர் பேரவையை தடை செய்யப்பட்ட  அமைப்புகளில் பட்டியலில் இருந்து விலத்தியதற்காக இலங்கை அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்கும் கடிதம் நீதி அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷவிடம் புதன்கிழமை (16) கையளிக்கப்பட்டது.

இந்த கடிதத்தை நீதி அமைச்சரிடம் பஞ்சலிங்கம் கந்தையா கனடிய தமிழர் பேரவையின் சார்பில் கையளித்தார்.

இந்த கடிதத்தில் இலங்கை அரசிடம் ஏற்கெனவே முன்வைத்த கோரிக்கைகளின் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கனடிய தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது

நல்லிணக்கச் செயற்பாட்டில் பங்கேற்பதற்கு வசதியாக கனடிய தமிழர் பேரவையை தடை செய்யப்பட்ட அமைப்புகள் பட்டியலில் இருந்து விலத்தியமைக்கும் இந்த கடிதத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு கனடிய தமிழர் பேரவை நன்றி தெரிவித்திருந்ததாக இலங்கை நீதி அமைச்சு தெரிவித்தது.

இந்த கடிதத்தை ஏற்றுக்கொண்ட நீதி அமைச்சர், அனைத்து இலங்கையர்களுடனும் உறவுகளையும் தொடர்பையும் மேம்படுத்தும் நோக்கத்திற்காக CTC தலைவர் சிவன் இளங்கோ, அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் டான்டன் துரைராஜா ஆகியோரை கொழும்புக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த August மாதம் கனடிய தமிழர் பேரவை உட்படப் பல புலம்பெயர் தமிழர் அமைப்புகள் மீதான தடையை இலங்கை அரசு நீக்கியது குறிப்பிடத்தக்கது.

Related posts

முடக்கப்பட்ட Freedom Convoy அமைப்பாளர்களின் நிதியை பெறுவதற்கான முயற்சி தோல்வி

Lankathas Pathmanathan

Halifax நகரத்தின் புதிய முதல்வராக Andy Fillmore தெரிவு

Lankathas Pathmanathan

பொது ஊழியர் சங்கத்தின் வேலை நிறுத்தம் குறித்து நாடாளுமன்றில் விவாதம்

Lankathas Pathmanathan

Leave a Comment