கனடா இழிவான முறையில் செயல்படுவதாக சீன அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் குற்றம் சாட்டினார்.
சீன ஜனாதிபதிக்கும் கனடிய பிரதமருக்கும் இடையிலான கடுமையான கருத்து பரிமாற்றத்தை தொடர்ந்து, இந்த குற்றச்சாட்டு வெளியானது.
ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் சீனா தலையிடுவதில்லை என மறுத்த சீன அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர், இரு நாட்டு உறவுகளில் ஏற்பட்ட சரிவுக்கு கனடா தான் காரணம் எனவும் கூறினார்.
சீனா-கனடா உறவுகளை மேம்படுத்துவதற்கான நிலைமைகளை உருவாக்க கனடா உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
கனடிய பிரதமருக்கும் சீன ஜனாதிபதிக்கும் இடையிலான உரையாடல் மிகவும் சாதாரணமானது என கூறிய அவர் சீன ஜனாதிபதி யாரையும் விமர்சிப்பதாகவோ அல்லது குற்றம் சாட்டுவதாகவோ கருதக்கூடாது எனவும் வலியுறுத்தினார்.