வேலை நிறுத்தத்தைத் தவிர்க்க வார விடுமுறை முழுவதும் அரசாங்கத்துடன் பேச்சுக்களில் ஈடுபட தயாராக உள்ளதாக கல்வி ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கம் தெரிவிக்கிறது.
எதிர்வரும் திங்கட்கிழமை திட்டமிடப்பட்ட வேலை நிறுத்தத்திற்கு முன்னதாக கல்வி அமைச்சுடன் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க உறுதி பூண்டுள்ளதாக CUPE ஒரு அறிக்கையில் தெரிவித்தது.
55 ஆயிரம் Ontario கல்வி ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கம் மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கான ஐந்து நாள் அறிவிப்பை புதன்கிழமை (16) தாக்கல் செய்தது.
இந்த நிலையில் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கு ஞாயிற்றுக்கிழமை (20) மாலை 5 மணி வரை காலக்கெடுவை அமைக்க இரு தரப்பும் ஒப்புக்கொண்டதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
கல்வி ஊழியர்கள் திங்கட்கிழமை (21) வேலை நிறுத்தத்தை ஆரம்பித்தால், இணையவழி கற்றலை ஆரம்பிக்குமாறு Ontario கல்வி அமைச்சகம் வியாழக்கிழமை (17) பாடசாலை வாரியங்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.